கைவல்ய நவநீதம் பாயிரம் இரண்டாம் பாடல்

 ஈன்றளித் தழிக்கும் செய்கைக் கேதுவாம் அயனாய் மாலாய் 

ஆன்ற ஈசனூமாய் அனந்த மூர்த்தியுமாய் நிற்கும்

 பூன்ற முத்தனூமாய் இன்பப் புணரி ஆதவனாய் நாளும் 

தோன்றிய விமல போத சொரூபத்தை பணிகின்றேன

மாயையின் இராசத, சத்துவ, தாமத குணங்களால் உலகினைப் படைத்தும், காத்து, அழிக்கும் எல்லாம் வல்ல முத்தொழிலுக்கும் காரணமாய் உள்ள தனது நிலையில் பிறழாது பரிபூரணமான, நித்திய முத்தனூமாய் சத்துவ குணத்தால் வைராக்கிய மயமான சாந்த விருத்தியில் விளங்கும் ஆனந்தக் கடலலாயும் அஇருளைக் கெடுக்கும் ஞான சூரியனாக சதாகாலமும் தானே விளங்குகின்றன நின்மலமான ஆன்ம சொரூபமான எமது குருநாதரை வணங்குகின்றேன் 

Comments

Popular posts from this blog

Thiru Thyakarajan kaivalya peru mantram

தாயுமானவ சுவாமிகள்