Posts

கைவல்ய நவநீதம் பாயிரம் ஏழாம் பாடல்

முத்தனை வேங்கடேச முகுந்தனை எனையாட் கொள்ளும் கத்தனை வணங்கிச் சொல்லும் கைவல்லிய நவநீதத்தை  தத்துவ விளக்கம் என்றும் சந்தேகம் தெளிதல் என்றும்  வைத்திரு  படலம் ஆக வகுத்துரை செய்கின்றேனே  இந்த கைவல்ய நவநீதம் எனும் ஞானநூலை  தாண்டவராய சுவாமிகள் தன் குருவான குரு நாராயண குருவை வணங்கி நூலைத் தொடங்குகிறார் எப்படி என்றால் என்னை  ஞானவான் ஆக்கியது  போல் இந்த கைவல்ய நவநீதம் நூலை விசாரம் செய்யும் அனைவரையும் ஞானமான இருக்க வேண்டும் என்று தன் குருவை உளமாரப் போற்றி வணங்கி ஆரம்பிக்கிறார் . கைவல்யம்  என்றால் மோட்சம்   நவநீதம் என்றால் வெண்ணை  இதில்  இரண்டு படலங்கள் உள்ளன தத்துவ விளக்கம் ,சந்தேகம் தெளிதல்   குரு சீடனுக்கு சந்தேகங்களை கேட்டு அதற்கு உபதேசம் செய்வது போன்று  எழுதப்பட்டுள்ளது

கைவல்ய நவநீதம் பாயிரம் ஆறாம் பாடல்

 படர்ந்த வேதாந்தம் என்னும் பாற்கடல் மொண்டு முந்நூற்  குடங்களில்  மறைத்து வைத்தார் குரவர்கள் எல்லாம் காய் ச்சி  கடைந்தெடுத் தளித்தேன் இந்த கைவல்ய நவநீதத்தை   அடைந்தவர் விடையமண்தின் றலைவரோ பசி  இலாரே  பிரமமெனும் காமதேனுவிற் சுரந்த வேதாந்தம் என்னும் பாலை விசாரமென்னும் நெருப்பினால் நீர்  சுண்ட காய்ச்சி விருத்தி ஞான  மென்னும் பிறை குத்தி உபதேசம் எண்னும் மத்திட்டு அனுபவ ஆராய்ச்சி என்னும் கடைதலை செய்து, அதிலெழும் கைவல்யம் மென்னும் நவநீதத்தை அனுபவத்தில் அடைந்து மகிழ்ப்பவர்கள் பிறப்பிறப்பினை யடைந்து வருந்துவரோ வருத்தமாடடார்கள் என்று உறுதி பட  கூறுவாராயினர்

கைவல்ய நவநீதம் பாயிரம் ஐந்தாம் பாடல்

 அந்தமும் நடுவும் இன்றி  ஆதியும் இன்றி  வான்போல்  சந்ததம் ஒளிரும் ஞான சற்குரு பாதம் போற்றி  பந்தமும் வீடும் காட்டா பரந்தநூல் பார்க்க மாட்டா  மைந்தரும் உணருமாறு வத்து  தத்துவம் சொல்வேனே ஆதி, நடு, அந்தமன்று  ஆகாயம் போன்று  எக்காலத்தும் விளங்கு ஞான வடிவான சதற்குருவினது  திருவடிகளை வணங்கி அவரது கிருபையினால் பந்த இலக்கணமும் , மோட்ச இலக்கணமும் தெரிவித்தற் பொருட்டு  விரிந்துள்ள வேதாந்த நூல்களை விசாரித்து உணரும் வழியின்றி நம்முடைய மாணவர்களும் எளிதில் அறியும்படி ஞானத்தின் பொருள் உண்மைகளை உள்ளபடி கூறுகிறேன். மைந்தர் : நூல் ஆய்வு செய்யா  மாணவர்கள்  வத்து  தத்துவம் :இந்நூலின் விடயம் வத்து சீவ பிரம்மங்கள்  தத்துவம்  : அவைகளின் ஏகத்துவம் 

கைவல்ய நவநீதம் பாயிரம் நான்காம் பாடல்

என்னுடைய மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம்   என்னுடைய அறிவினாலே இரவி முன் இமமே ஆக்கி   என்னுடை நீயும் நானும் ஏகம் என் னறக்கியம் செய்ய  என்னுடைய குருவாய் தோன்றிய ஈசனை இனறஞ்சுனேன்   எதனால் ஞானத்தை வணங்கினார் என்றால் ஒரு ஜீவன் மானிடப் பிறப்பு க்கு வந்து ஆத்ம விசாரம் செய்து ஞானத்தை அடைந்து அதன் பின்னர் இந்த பிரபஞ்ச பதார்தத்ததில் உள்ள புறபற்றும் அகபற்றும் நீங்குகிறதாம். அதன் பின்னர் ஆத்மா சத்தியம் என்று நிச்சயம் உண்டாகிறது. இந்த நிச்சயத்தாலேயே அறையே பஞ்சபூத பதார்தத்தங்கள் அனைத்தும் மித்தையாக தோன்றுகிறது. இப்படி உணரப்பட்ட பஞ்ச பூத பதார்த்தங்களை மனம் பற்று வதில்லை. அப்படிப்பட்ட மனம் அகத்தும் புறத்தும் விறகு இல்லாத நெருப்பு போல தானே ஓய்ந்து ஒடுங்கி நசிந்து முடிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட மனோ நாசத்திற்கு " ஸர்வ துக்க நிவர்த்தி " என்றும் " நித்திய முக்தி " என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலை கிடைப்பதற்கு காரணம் ஞானம் அல்லவா. அதனால் ஞானத்தை அள்ளித் தரும் ஞானாசானை வணங்கினார்.  குரு "கு " எனின் அஞஞானம் (அந்தகாரம், அவிச்சை ) என்றும் ,  "ரூ "அதாவது அஞ்ஞ

கைவல்ய நவநீதம் பாயிரம் மூன்றாம் பாடல்

எவருடை அருளால் யானே    எங்குமாம் பிரமமம் என்பால் கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்றறிந்து சுவரிடைவெளிபோல் யான் என் சொருபசு பாவம் ஆனேன் அவருடைப் பதுமபாதம் அநுதினம் பணிகின்றேனே  எதனால் குருவையே வணங்கினார் என்றால் இந்த ஏக நாயகனாகிய பரமான்மா இந்த உலக உற்பத்திக்கு முன்னாலே இருப்பதால் தனக்கு உபதேசித்த குருனவ வணங்கினார்.  இந்த உடம்பில் இருக்கும் ஜீவாத்மாவை போலவே இதற்கு முன் எடுத்த அனேக உடம்புகளிலும் ஜீவாத்மா இருந்தது ஆனால் இந்த ஜீவனுக்கு மோட்சம் கிடைப்பதில்லை. அந்த ஜீவன் செய்த புண்ணியத்தால் ஒரு சற்குரு வந்து சந்தித்து நீ புறத்திலே தேடுகின்ற ஆன்மா உன் உடம்புக்குள்ளேயே அறிவு சொரூபமாக இருக்கிறது அதை விசாரித்து தரிசிப்பது தான் ஆன்ம தரிசனம் ஆகும் என்று மறைகளும் முழங்குகிறது.   இந்த பிரம்மஞான தரிசனத்தாலெயே ஸர்வ துக்க நிவர்த்தியும் பரமானந்தம் பிராப்தியும் சித்திக்கிறது இப்படிப்பட்ட பெருநிலை குரு உபதேசத்தால் அல்லவா கிட்டுகிறது அதனால் அனுதினமும் குருவைப் பணிந்து வணங்குகிறேன் என்று கூறுவார்.

கைவல்ய நவநீதம் பாயிரம் இரண்டாம் பாடல்

 ஈன்றளித் தழிக்கும் செய்கைக் கேதுவாம் அயனாய் மாலாய்  ஆன்ற ஈசனூமாய் அனந்த மூர்த்தியுமாய் நிற்கும்  பூன்ற முத்தனூமாய் இன்பப் புணரி ஆதவனாய் நாளும்  தோன்றிய விமல போத சொரூபத்தை பணிகின்றேன மாயையின் இராசத, சத்துவ, தாமத குணங்களால் உலகினைப் படைத்தும், காத்து, அழிக்கும் எல்லாம் வல்ல முத்தொழிலுக்கும் காரணமாய் உள்ள தனது நிலையில் பிறழாது பரிபூரணமான, நித்திய முத்தனூமாய் சத்துவ குணத்தால் வைராக்கிய மயமான சாந்த விருத்தியில் விளங்கும் ஆனந்தக் கடலலாயும் அஇருளைக் கெடுக்கும் ஞான சூரியனாக சதாகாலமும் தானே விளங்குகின்றன நின்மலமான ஆன்ம சொரூபமான எமது குருநாதரை வணங்குகின்றேன் 

பாயிரம் (கைவல்ய நவநீதம்) KAIVALYA NAVANEETHAM

பொன் நிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் உள்ளம்  தன்னில் அந்தரத்தின் சீவ சாட்சி  மாத்திரமாய் நிற்கும்  என் நிலங்களிலும் மிக்க ஏழு நிலம் அவற்றின் மேலாம்  நன்னிலம் மரூவும் ஏக நாயகன்      பதங்கள் போற்றி பொன் இடத்தும், மண்ணின் இடத்தும், பெண்ணின் இடத்தும் ஆசையுள்ள அஞ்ஞானிகளின் உள்ளத்திலும், மேற்கூறிய மூன்று இடத்தில் ஆசையுள்ள மெய்ஞானிகளின் உள்ளத்திலும், எமது இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் எமது ஞான குரு நாதரே நீவிர் நான்கு பூதங்களிலும் நிறைந்திருக்கின்ற ஆகாயத்தைப் போல் கூடத்தை சைதன்யம் மாத்திரமாக நிறைந்திருக்கின்ற, எல்லா நிலங்களிலும் மேலான ஞான பூமிகள் ஏழினுள் முடிவான நன்னிலமான சூரிய பூமியில் பொருந்தி வாழும் ஏக நாயகனே உமது திருவடிகளை வணங்குவோம்.   தாண்டவராய சுவாமிகளின் ஞானகுரு நாராயணகுரு சமாதி ஆலயம் பெற்ற வர் நன்னிலமென்னும் நல்லூர சிலேடையாக சூரிய பூமியின் நன்னிலம் மருவும் ,என்று கூறி நம்மை வியக்க வைப்பார் நன்னிலம் என்னும் நல்லூரில் நூலாசிரியர் தாண்டவ மூர்த்தி சுவாமிகளும் ஆசிரியரின் குருபிரான் நாராயணகுரு மதுவனம் என்ற இடத்தில் ஒடுக்கம் பெற்று அருட்கொடை ஆற்றி வருகிறார்கள் என