Guruji Maha Kanam Thanga Swamigal (நான் கண்ட குருநாதர்)

                                                  சங்கரர்ப்பணம்

                                               குருவே துணை

"நான் கண்ட குருநாதர்" தலைப்பின் முழு அர்த்தத்தை விவரிக்கும் கால் கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதும் மட்டும் அன்று அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது.

 எல்லோரும் குரு ஆகிவிட முடியாது உறுதியான மரக்கட்டை தானும் மிதக்கும் மற்றவர்  மிதக்கும் உதவும். ஆனால் உறுதியற்ற கட்டையில் ஏறினால் கட்டையும் மூழ்கும்   கட்டையைப் பிடித்துக் கொண்டிரு இருப்பவனும்    மூழ்கு வான் எனவே சத்குருவின் துணையில்லாமல் சம்சார பந்தத்தை கடக்க முடியும் என்பது இயலாத காரியம் மற்றுமோர் வழியில் பார்த்தோமானால்,  வழிநடத்த ஒவ்வொரு இடத்திலும் இறைவனே குருவாக வருகிறார் அவரே சச்சிதானந்தம்.


 ஒரு தாய்க்கு குழந்தையிடம் உள்ள மனப்போக்கு குருவினுடையது. உலக பந்தத்திலிருந்து ஒரு மனிதனை விடுவிக்க மற்றொரு மனிதனுக்கு "என்ன சக்தியிருக்கிறது?".நல்ல சத்குரு வாய்ப்பார் ஆனால் சீடனின் அகங்காரம் தானாக அடங்கி இவ்விஷயம் நடக்கும் குருவின் அருள் கிடைத்துவிட்டால் "நீ யார்?" என்ற உண்மைனய  அவர் உணர்த்துவார்.
குருநாதரிடம் ஆன எனது அனுபவங்கள் 1992ஆம் ஆண்டு முதல் தொடங்கியது நான் படித்த சில விடயங்களை கண்ட போது குண்டலினி தீட்சை பெற்ற ஒருவன் இவ்வுலகில் சம்சார வாழ்க்கை வாழ தகுதியற்ற துறவு வாழ்க்கை வாழ்வான் உலகம் துறப்பான். ஆனால் குருநாதர் அவர்களை சந்தித்தபோது அவர்கள் தோட்டத்தில் எலுமிச்சம் பழம் பறித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குச் சந்தேகம் இந்த மனிதரால் எப்படி தீட்சை தர முடியும் படித்தது ஒன்று பார்ப்பது ஒன்றாக உள்ளது. மேலும் அந்த பௌர்ணமி நாளில் தீட்சை பெற செல்லும் போதும் எனக்கு  ஏற்றுக்கொள்ள மணம் வாரரமல் அரைமனதுடன் பூஜைக்குச்  சென்றேன் தீட்சை அருளப்பட்டது.

 தீட்சை பெற்ற  அன்றே தலை பாரமானது போன்ற ஒரு உணர்வு  மேலும் ஒரு சிறு நம்பிக்கை தியானம் பழகலாம் என்று தொடர்ந்து நான்கு மாதங்கள் பயிற்சி செய்து செய்தபோது முதுகுத்தண்டுவடத்தில் எறும்பு ஊர்வது போன்ற ஒரு உணர்வு நெற்றியில் ஒரு அரிப்பு உணர்வு மேலும் உள்ளுணர்வுகள் அளிக்கப்பட்ட பொழுது அதில் வைத்து பயிற்சி செய்யும் பொழுது "நல்ல ஞாபக சக்தியும்" " நேர்மறை எண்ணங்களும்" ஏற்பட ஆரம்பித்தன.

கர்மவினை சிலர் சொல் கேட்டு  என்னுடைய பயிற்சியை அந்த நான்கு மாதங்களில் முடித்துக்கொண்டு விட்டேன்.   

 பின்பு இடையில் சில சமயம் குருநாதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்நாளில் அவர்கள் சபைக்கு   வரச் சொல்லிய போதும் செல்லாமல் இருந்த நான்  2015 ஆம் ஆண்டிற்குப் பின்னால் சபை விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்தேன். தீராத மனக்குழப்பத்தில் திரும்பவும் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன் இருப்பினும் சந்தேகம் சபையில் சில முரண்பாட பழக்கவழக்கம் கண்டு அதிர்ச்சி. இச்சபைக்கு இவ்விஷயம் தேவைப்படுமா என்று, யாரிடம் கேட்பது என்று குருநாதரிடம் சென்று கேட்டு விடலாம்? அத்தையை சந்தர்ப்பம் குருநாதரை தனியாக சந்திக்கும் வாய்ப்பு அருளப்பட்டு என்னுடைய சந்தேகங்களை கேட்டபோது குருநாதர் அவர்கள் தன்னுடைய சிரிப்பால் விடை அளித்து விட்டு , சில கேள்விகளைக் கேட்டுவிட்டு அறியாமல் ஏற்பட்ட சந்தேகத்திற்கான விளக்கம் அளித்ததோடு மட்டுமல்ல, அக்கு பயிற்சி அருளினார்கள் ஆனால் மீண்டும் சந்தேகம் இதுவும் ஏமாற்று வேலையா  என்று ஆனால் ஒருபோதும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தோம்.
எனக்கு ஏழாவது நாளில் அதற்கான உணர்வு தென்பட ஆரம்பித்தது பல்லி வால் வந்து உச்சந்தலையில் துடிப்பது போன்ற உணர்வு மேலும் இவ்வுணர்வு ஏற்பட்ட மறு நாள் அலைபேசியில் என்னை அழைத்துப் பேசிய குருநாதர் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருமாறு கூறினார்கள். மீண்டும் அடுத்த சந்தேகம் "ஆன்மா எங்கு உள்ளது? எப்படி உள்ளது? இந்தப் பயிற்சிகள் மூலம் ஆன்மாவை எப்படி தெரிந்து கொள்வது?" இந்தக் கேள்வியுடன் சென்றபோது குருநாதர் ஒரு சிரிப்பு மட்டும் செய்துவிட்டு உலக விஷயங்களை மட்டும் பேசிவிட்டு என்னை அனுப்பி விட்டார்கள். சிறிது காலம் கழித்து குரு அருளால் இரவு நேர பயிற்சியின்போது உடல் முழுவதும் எலக்ட்ரிக்கல் ஷாக் அடித்தது போன்ற ஒரு உணர்வு மேலும் அடுத்த சில நாட்களிலேயே என்னென்று அனுபவங்களில் நான் கண்ட காட்சியானது.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
 துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்குமத் தோயமென்ன 
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையே

 இது அபிராமி அந்தாதியின் முதல் பாட்டின் அனுபவம் முழுமையாக கிடைத்தது அகக் கண்ணால் அந்தத் தாமரையின் நடுவே ஒளிப்பிழம்பாக என்னை காண முடிந்தது மறு நிமிடமே மனம் வெளி உலக வாழ்க்கைக்கு இழுத்துவந்து விட்டதுஒரு வார்த்தை கேட்டதற்காக அனுபவத்தை காட்சி அதன் சந்தேகத்தை முற்றுப் பெறச் செய்த குருநாதர் நாம் பூஜிக்கத் தகுந்தவர் என்பதை அறிந்துகொள்ளும் நல்வாய்ப்பு குருவின் அருளால் அருளப்பட் .

" தன்னை அறிந்ததுண்டா தலைவனை நீ அறிவாய் மகனே" `-  இது ஐயா அவர்கள் அருள் நூல் பக்கம் 41ல் சொன்ன விஷயம்.
தன்னையும் , தலைவனையும் அறிய சற்குருநாதர் ஒருவரே வழி அவருடைய வாக்கினில் முழுநம்பிக்கை தீவிரமாகஇருப்பின் எல்லோராலும் இப்பேருண்மையை உணர முடியும் 

 

Comments

Popular posts from this blog

Thiru Thyakarajan kaivalya peru mantram

தாயுமானவ சுவாமிகள்