பாயிரம் (கைவல்ய நவநீதம்) KAIVALYA NAVANEETHAM
பொன் நிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் உள்ளம்
தன்னில் அந்தரத்தின் சீவ சாட்சி மாத்திரமாய் நிற்கும்
என் நிலங்களிலும் மிக்க ஏழு நிலம் அவற்றின் மேலாம்
நன்னிலம் மரூவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி
பொன் இடத்தும், மண்ணின் இடத்தும், பெண்ணின் இடத்தும் ஆசையுள்ள அஞ்ஞானிகளின் உள்ளத்திலும், மேற்கூறிய மூன்று இடத்தில் ஆசையுள்ள மெய்ஞானிகளின் உள்ளத்திலும், எமது இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் எமது ஞான குரு நாதரே நீவிர் நான்கு பூதங்களிலும் நிறைந்திருக்கின்ற ஆகாயத்தைப் போல் கூடத்தை சைதன்யம் மாத்திரமாக நிறைந்திருக்கின்ற, எல்லா நிலங்களிலும் மேலான ஞான பூமிகள் ஏழினுள் முடிவான நன்னிலமான சூரிய பூமியில் பொருந்தி வாழும் ஏக நாயகனே உமது திருவடிகளை வணங்குவோம்.
தாண்டவராய சுவாமிகளின் ஞானகுரு நாராயணகுரு சமாதி ஆலயம் பெற்ற வர் நன்னிலமென்னும் நல்லூர சிலேடையாக சூரிய பூமியின் நன்னிலம் மருவும் ,என்று கூறி நம்மை வியக்க வைப்பார் நன்னிலம் என்னும் நல்லூரில் நூலாசிரியர் தாண்டவ மூர்த்தி சுவாமிகளும் ஆசிரியரின் குருபிரான் நாராயணகுரு மதுவனம் என்ற இடத்தில் ஒடுக்கம் பெற்று அருட்கொடை ஆற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment