கைவல்ய நவநீதச் சேவையாளர் தியாகராஜன் த மிழில் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்ய நவநீதம். 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த நன்னிலம் தாண்டவராய சுவாமிகளால் இயற்றப்பட்டது இந்த நூல். அத்வைதத் தத்துவ நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவந்த சூழலில் ‘கைவல்ய நவநீதம்’ நூல் தமிழிலிருந்து திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சென்றது. 1855-ல் டாக்டர் கார்ல்க்ரோல் என்ற ஜெர்மானியரால் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது இந்த நூல். ஆன்ம நிலையை விரும்பும் ஞான சாதகர்களுக்கு ரமண மகரிஷியால் முக்கியமாகப் பரிந்துரைக்கப்பட்ட நூல் இதுவே. விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி., தனது சுயசரிதையில் “கைவல்ய மெனும் கருத்துயர் நூலின் நன்பதம் தெரிந்தேன்” என்று இந்த நூலைக் குறிப்பிடுவார். தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதிய கைவல்ய சுவாமி கரூர் மவுனசாமி மடத்தில் தத்துவ விசாரணையில் ஈடுபட்டபோது பெரும்பாலான உவமானங்களை இந்த நூலிலிருந்து கையாண்டதால் ‘கைவல்ய சுவாமிகள்’ என்ற அழைக்கப்பட்டார். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் சும...
குருவே சரணம்
ReplyDeleteசங்கர்ராபரணம்
ReplyDelete