கைவல்ய நவநீதம் பாயிரம் மூன்றாம் பாடல்
எவருடை அருளால் யானே எங்குமாம் பிரமமம் என்பால்
கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்றறிந்து
சுவரிடைவெளிபோல் யான் என் சொருபசு பாவம் ஆனேன்
அவருடைப் பதுமபாதம் அநுதினம் பணிகின்றேனே
எதனால் குருவையே வணங்கினார் என்றால் இந்த ஏக நாயகனாகிய பரமான்மா இந்த உலக உற்பத்திக்கு முன்னாலே இருப்பதால் தனக்கு உபதேசித்த குருனவ வணங்கினார்.
இந்த உடம்பில் இருக்கும் ஜீவாத்மாவை போலவே இதற்கு முன் எடுத்த அனேக உடம்புகளிலும் ஜீவாத்மா இருந்தது ஆனால் இந்த ஜீவனுக்கு மோட்சம் கிடைப்பதில்லை. அந்த ஜீவன் செய்த புண்ணியத்தால் ஒரு சற்குரு வந்து சந்தித்து நீ புறத்திலே தேடுகின்ற ஆன்மா உன் உடம்புக்குள்ளேயே அறிவு சொரூபமாக இருக்கிறது அதை விசாரித்து தரிசிப்பது தான் ஆன்ம தரிசனம் ஆகும் என்று மறைகளும் முழங்குகிறது.
இந்த பிரம்மஞான தரிசனத்தாலெயே ஸர்வ துக்க நிவர்த்தியும் பரமானந்தம் பிராப்தியும் சித்திக்கிறது இப்படிப்பட்ட பெருநிலை குரு உபதேசத்தால் அல்லவா கிட்டுகிறது அதனால் அனுதினமும் குருவைப் பணிந்து வணங்குகிறேன் என்று கூறுவார்.
Comments
Post a Comment