கைவல்ய நவநீதம் பாயிரம் நான்காம் பாடல்

என்னுடைய மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம் 
 என்னுடைய அறிவினாலே இரவி முன் இமமே ஆக்கி 
 என்னுடை நீயும் நானும் ஏகம் என் னறக்கியம் செய்ய
 என்னுடைய குருவாய் தோன்றிய ஈசனை இனறஞ்சுனேன் 

 எதனால் ஞானத்தை வணங்கினார் என்றால் ஒரு ஜீவன் மானிடப் பிறப்பு க்கு வந்து ஆத்ம விசாரம் செய்து ஞானத்தை அடைந்து அதன் பின்னர் இந்த பிரபஞ்ச பதார்தத்ததில் உள்ள புறபற்றும் அகபற்றும் நீங்குகிறதாம். அதன் பின்னர் ஆத்மா சத்தியம் என்று நிச்சயம் உண்டாகிறது. இந்த நிச்சயத்தாலேயே அறையே பஞ்சபூத பதார்தத்தங்கள் அனைத்தும் மித்தையாக தோன்றுகிறது. இப்படி உணரப்பட்ட பஞ்ச பூத பதார்த்தங்களை மனம் பற்று வதில்லை. அப்படிப்பட்ட மனம் அகத்தும் புறத்தும் விறகு இல்லாத நெருப்பு போல தானே ஓய்ந்து ஒடுங்கி நசிந்து முடிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட மனோ நாசத்திற்கு "ஸர்வ துக்க நிவர்த்தி" என்றும் "நித்திய முக்தி " என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலை கிடைப்பதற்கு காரணம் ஞானம் அல்லவா. அதனால் ஞானத்தை அள்ளித் தரும் ஞானாசானை வணங்கினார்.

 குரு

"கு " எனின் அஞஞானம் (அந்தகாரம், அவிச்சை ) என்றும் ,

 "ரூ "அதாவது அஞ்ஞானத்தை ஒழித்து ஞானத்தை தருபவர் எனலாம்

Comments

Popular posts from this blog

Thiru Thyakarajan kaivalya peru mantram

தாயுமானவ சுவாமிகள்