கைவல்ய நவநீதம் பாயிரம் ஆறாம் பாடல்

 படர்ந்த வேதாந்தம் என்னும் பாற்கடல் மொண்டு முந்நூற்

 குடங்களில்  மறைத்து வைத்தார் குரவர்கள் எல்லாம் காய் ச்சி

 கடைந்தெடுத் தளித்தேன் இந்த கைவல்ய நவநீதத்தை 

 அடைந்தவர் விடையமண்தின் றலைவரோ பசி  இலாரே 

பிரமமெனும் காமதேனுவிற் சுரந்த வேதாந்தம் என்னும் பாலை விசாரமென்னும் நெருப்பினால் நீர்  சுண்ட காய்ச்சி விருத்தி ஞான  மென்னும் பிறை குத்தி உபதேசம் எண்னும் மத்திட்டு அனுபவ ஆராய்ச்சி என்னும் கடைதலை செய்து, அதிலெழும் கைவல்யம் மென்னும் நவநீதத்தை அனுபவத்தில் அடைந்து மகிழ்ப்பவர்கள் பிறப்பிறப்பினை யடைந்து வருந்துவரோ வருத்தமாடடார்கள் என்று உறுதி பட  கூறுவாராயினர்

Comments

Popular posts from this blog

Thiru Thyakarajan kaivalya peru mantram

தாயுமானவ சுவாமிகள்