கைவல்ய நவநீதம் பாயிரம் ஐந்தாம் பாடல்

 அந்தமும் நடுவும் இன்றி  ஆதியும் இன்றி  வான்போல் 

சந்ததம் ஒளிரும் ஞான சற்குரு பாதம் போற்றி

 பந்தமும் வீடும் காட்டா பரந்தநூல் பார்க்க மாட்டா

 மைந்தரும் உணருமாறு வத்து  தத்துவம் சொல்வேனே

ஆதி, நடு, அந்தமன்று  ஆகாயம் போன்று  எக்காலத்தும் விளங்கு ஞான வடிவான சதற்குருவினது  திருவடிகளை வணங்கி அவரது கிருபையினால் பந்த இலக்கணமும் , மோட்ச இலக்கணமும் தெரிவித்தற் பொருட்டு  விரிந்துள்ள வேதாந்த நூல்களை விசாரித்து உணரும் வழியின்றி நம்முடைய மாணவர்களும் எளிதில் அறியும்படி ஞானத்தின் பொருள் உண்மைகளை உள்ளபடி கூறுகிறேன்.

மைந்தர் : நூல் ஆய்வு செய்யா  மாணவர்கள் 

வத்து  தத்துவம் :இந்நூலின் விடயம் வத்து சீவ பிரம்மங்கள் 

தத்துவம்  : அவைகளின் ஏகத்துவம் 


Comments

Popular posts from this blog

Thiru Thyakarajan kaivalya peru mantram

தாயுமானவ சுவாமிகள்