கைவல்ய நவநீதம் பாயிரம் ஏழாம் பாடல்
முத்தனை வேங்கடேச முகுந்தனை எனையாட் கொள்ளும்
கத்தனை வணங்கிச் சொல்லும் கைவல்லிய நவநீதத்தை
தத்துவ விளக்கம் என்றும் சந்தேகம் தெளிதல் என்றும்
வைத்திரு படலம் ஆக வகுத்துரை செய்கின்றேனே
இந்த கைவல்ய நவநீதம் எனும் ஞானநூலை தாண்டவராய சுவாமிகள் தன் குருவான குரு நாராயண குருவை வணங்கி நூலைத் தொடங்குகிறார் எப்படி என்றால் என்னை ஞானவான் ஆக்கியது போல் இந்த கைவல்ய நவநீதம் நூலை விசாரம் செய்யும் அனைவரையும் ஞானமான இருக்க வேண்டும் என்று தன் குருவை உளமாரப் போற்றி வணங்கி ஆரம்பிக்கிறார் .
கைவல்யம் என்றால் மோட்சம்
நவநீதம் என்றால் வெண்ணை
இதில் இரண்டு படலங்கள் உள்ளன தத்துவ விளக்கம் ,சந்தேகம் தெளிதல்
குரு சீடனுக்கு சந்தேகங்களை கேட்டு அதற்கு உபதேசம் செய்வது போன்று எழுதப்பட்டுள்ளது
Comments
Post a Comment